பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த வழக்கு: மேலும் 2 வாலிபர்கள் கைது

பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த வழக்கு தொடா்பாக மேலும் 2 வாலிபர்களை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-09-19 21:46 GMT

பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பீபின்குமார். இவர் ஈரோட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அதே மாநிலத்தை சேர்ந்த வால்மீகி, ஜிதேந்தர் குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்யகுமார் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர்களை கடத்தி சென்று தாக்கி பணம் பறித்தது தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீபின்குமார், தமிழ்ச்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புகழேந்தி, மோதிலால் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 2 பேர் மீதும் வடமாநில வாலிபர்களை கடத்தி பணம் பறித்த மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்