காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் படுகாயம்

Update: 2022-11-16 16:05 GMT


குடிமங்கலத்தை அடுத்த விருகல்பட்டி பழையூரை சேர்ந்தவர் தங்கமுத்து. விவசாயி. விருகல்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளார். தற்போது பருத்திக்கு உரம்வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தங்கமுத்து தோட்டத்திற்கு நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் வேலை ஆட்கள் உரம் வைக்க சென்றனர். பருத்தி செடிக்கு உரம் வைத்துக் கொண்டிருந்தபோது பருத்தி செடிக்குள் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி வேலை செய்து கொண்டிருந்த திருமலைச்சாமி என்பவரது மனைவி பாப்பாத்தியை (வயது 46) தாக்கியது

பருத்திசெடிக்கு உரமவைத்து கொண்டிருந்தவர்கள் சத்தம் போடவே காட்டுப்பன்றி ஓடிவிட்டது.காட்டுப்பன்றி தாக்கியதில் காலில் காயமடைந்த பாப்பாத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுப் பன்றி தாக்கியது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்