ரூ.30 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க பூமி பூஜை

வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியில் ரூ.30 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2023-03-15 18:28 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியில் ரூ.30 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

வாணியம்பாடி - பெரியபேட்டை பகுதியில் சுகாதார மையம் அமைத்து தரக்கோரி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் 1-வது வார்டு பகுதியில் புதிதாக நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இதில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்