பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை

பஸ் நிறுத்தம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது;

Update:2023-10-22 00:15 IST

முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வநாயகபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் முதுகுளத்தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த பஸ் நிறுத்தம் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பாலுச்சாமி, செல்லியம்மன் கோவில் நிர்வாக கமிட்டி பொருளாளர் பெருமாள், கூட்டுறவு செயலாளர் அரிய முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் புளியங்குடி அருந்ததியர் பகுதியில் கலையரங்கம் அமைக்க முதுகுளத்தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜையும் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்