புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை

அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது;

Update:2023-06-18 00:15 IST

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ரூசா 2.0 நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய உடற்கல்வி வகுப்பறைகளுக்கான தரைத்தள கட்டிடம் மற்றும் நுண்கலைகளுக்கான கட்டிடம், ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கணினி அறிவியல் கட்டிம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராஜாராம், ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன் மற்றும் மாணவர் நல முதன்மை வேதிராஜன், தேர்வாணையர் கண்ணபிரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்