நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி மாரியம்பட்டியில் ரூ.16.55 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் வைகுந்தம், ஒன்றியக்குழு துணை தலைவர் பெரியண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் உதயகுமார், ஒப்பந்ததாரர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் இளங்கவி, பாண்டு, மாது, முனுசாமி, நீதிபதி, கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.