கம்பைநல்லூர் பேரூராட்சியில் ரூ.70 லட்சம் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

Update:2023-06-17 00:15 IST

மொரப்பூர்

கம்பைநல்லூர் பேரூராட்சி 1-வது வார்டு தங்கவேல் நகர், சாம்பல் கொல்லை ஆகிய பகுதிகளில் ரூ.70 லட்சத்தில் ேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.மதியழகன் ஆகியோர் தலைமை தாங்கி பூமி செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ஜெகதீசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் தீ.சரவணன், எம்.குமார், சங்கீதா, நந்தினி, குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உதவியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜீவா, சாந்தி, ரமேஷ், விஜயலட்சுமி, முருகம்மாள், அஜந்தா, ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்