புதிய சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமிபூஜை

தலைஞாயிறு பேரூருாட்சி புதிய சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.

Update: 2022-06-06 14:06 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையவளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார மையகட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைஞாயிறு பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தி சுப்ரமணியன் நன்றி கூறினார். இதேபோல்தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ. 28.94லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நேரடிநெல் கொள்முதல் நிலையம் கட்டிடம்கட்டுவதற்கான பூமிபூஜையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்