உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஆற்காடு அருகேஉயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-15 17:47 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் கீழ்குப்பம் ஊராட்சியில் நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ரூ.370. 47 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், கோட்ட பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி இயக்குனர் சத்தியசாய் நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்