சோளிங்கரில் ரூ.99 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
சோளிங்கரில் ரூ.99 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.;
சோளிங்கர்
சோளிங்கரில் ரூ.99 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், கொண்டபாளையம், அண்ணாநகர், எசையனூர், மோட்டூர் உள்ளிட்ட 18 தெருக்களுக்கு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 21-வது வார்டு உறுப்பினர் ராதா வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பழனி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் நகராட்சி கவுன்சிலர் அருண்ஆதி, அன்பரசு, மோகனா சண்முகம், பணி ஆய்வாளர் மனோஜ்குமார், நகர செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.