சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கடையநல்லூர் திரிகூடபுரத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.;

Update:2023-08-20 01:05 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரம் பஞ்சாயத்து பசும்பொன் தேவர் தெருவில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியில் இருந்து ரூ.9.95 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், தி.மு.க. கிளை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்