கள்ளக்குறிச்சி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு பின்புற பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 11-ந் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் 12-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹிதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் 7.30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.