ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவால் பூட்டோவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி பிலாவால் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் பிலாவால் உருவப்படத்தை, பா.ஜ.க.வினர் தீயிட்டு கொளுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. சவுந்தரம், பா.ஜ.க. தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.