பாரதீய ஜனதா கட்சி புதிய அலுவலகம் திறப்பு விழா
செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சி புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.;
செங்கோட்டை:
செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சி 43-ம் ஆண்டு ஸ்தாபனத்தை முன்னிட்டு செங்கோட்டை பாரதீய ஜனதா கட்சியின் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கட்சி அலுவலகத்தை மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மண்டல பார்வையாளர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் கவுன்சிலர் செண்பகராஜன், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் காளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.