நச்சலூர்,
நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் ஊராட்சி பெரியபனையூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காளியம்மன், ஒண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் திருவிழாவையொட்டி நங்கவரம் ஒத்தக்கடை வாரியில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பகவதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.