பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நத்தம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நத்தம் அருகே பாப்பாபட்டி கிராமத்தில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் முதல்நாள் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கைபரப்பு செயலாளர் சிவசங்கரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், பழனிக்குமார், இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் நத்தம் கணேசன், ஊர் நாட்டாமை ஆவிச்சிபட்டி பொன் சேது நாகராஜன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.