பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-03-01 18:43 GMT

பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீ மீதி திருவிழா கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் கவுல்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர். இதில் கவுல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் கிடா வெட்டும், இரவில் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தியும், மா விளக்கு எடுத்தும் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்