மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update: 2022-10-12 18:45 GMT

காரைக்குடி, 

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைசிறுவயல் அருகே புலிகுத்திஅம்மன் கோவில் மதுஎடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் அரண்மனைசிறுவயல்-காளையார்கோவில் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 90 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டன. அதில், முதல் பரிசை திருவாதவூர் புதுப்பட்டி சின்னசாமி வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 48 வண்டிகள் கலந்துகொண்டன. இருபிரிவாக இந்த போட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை பாகனேரி ராமநாதன் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 2-வது பரிசை ஆலத்துப்பட்டி அழகு வண்டியும், 3-வது பரிசை தேனி மாவட்டம் பன்ணைபுரம் ஜீவன் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி

அதன் பின்னர் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக ேபாட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை சிவல்கண்மாய் ராமலிங்கம் வண்டியும், 2-வது பரிசை அறந்தாங்கி குமார் வண்டியும், 3-வது பரிசை கல்லல் வெல்கம்பிராய்லஸ் வண்டியும் பெற்றது.

2-வது பரிவில் முதல் பரிசை அறந்தாங்கி குமார் வண்டியும், 2-வது பரிசை வெல்கம்பிராய்லஸ் வண்டியும், 3-வது பரிசை கல்லல் மணி வண்டியும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்