பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
பெங்களூரு கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;
சென்னை,
தர்மபுரி - பாலக்கோடு இடையே ரெயில் நிலையங்களில் இன்ஜினீயரிங் வேலை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பெங்களூரு கண்டோன்மென்ட் - கோவை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு கண்டோன்மென்டிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்.20641), அதற்கு மாற்றாக, நாளை (திங்கட்கிழமை) முதல் மே 28-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை மட்டும்) பெங்களூரு கண்டோன்மென்டிலிருந்து மதியம் 3.15 மணிக்கு (55 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு கோவை வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.