கலெக்டர் அலுவலகம் முன்பு நாட்டுமாடுகள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-11-07 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா குறித்து அவதூறாக பேசிய பத்ரி சேசாஸ்திரியை கைது செய்யக்கோரியும், பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்தும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஆதி தலைமை தாங்கினார். மாநில தலைவர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் இதுதொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்