விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
அன்னப்பன்பேட்டையில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி;
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆக்கூர் ஊராட்சி அன்னப்பன்பேட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் விண்ணரசி வரவேற்றார். மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் பேசினார். முகாமில் அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் செல்வகுமரன், சிவசஞ்சீவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.