தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

Update: 2022-11-24 18:45 GMT

தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தேனீ வளர்ப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேளாண் அலுவலர் நவீன்குமார் தலைமை தாங்கினார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பமேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வேளாண்மை உதவி அலுவலர் வேதரத்தினம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பது குறித்தும், மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சிகள் துறை உதவி பேராசிரியர் சந்திரசேகரன் பேசினார். நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார உதவி மேலாளர் மாசேதுங் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்