தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த பீடி இலை பண்டல்கள் ேசகரிப்பு
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த பீடி இலை பண்டல்களை கடலோர போலீசார் சேகரித்தனர். அவற்றை கடலில் வீசிவிட்டு தப்பிய கடத்தல்காரர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த பீடி இலை பண்டல்களை கடலோர போலீசார் சேகரித்தனர். அவற்றை கடலில் வீசிவிட்டு தப்பிய கடத்தல்காரர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
பீடி இலை பண்டல்கள்
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சில மூடைகள் கரை ஒதுங்கி கிடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ராமேசுவரம் கடலோர போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இணைந்து ரோந்து சென்றனர்.
தனுஷ்கோடி கடற்கரையில் ஆங்காங்கே கரை ஒதுங்கி கிடந்த 15 பண்டல்களை ேசகரித்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
ஒவ்வொரு பண்டலும் சுமார் 30 கிலோ எடை கொண்டது எனவும், சுமார் 450 கிலோ பீடி இலை ைகப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கடலோர போலீசார் தெரிவித்தனர்.
கடலில் வீசி சென்றனர்
கடத்தல்காரர்கள் படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்திச் சென்றபோது, கடற்படையின் ரோந்து கப்பலை கண்டதும் பீடி இலை பண்டல்களை கடலில் வீசிவிட்டு, கடத்தல்காரர்கள் தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள சில மணல் திட்டுகளிலும் பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவற்றை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீடி இலை பண்டல்களை கடலில் வீசிவிட்டு தப்பிய கடத்தல்காரர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.