மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தூய்மை பணியாளர் தற்கொலை

பெருந்துறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-22 21:46 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

தூய்மை பணியாளர்

பெருந்துறையை அடுத்த பெரிய வேட்டுவபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 26). இவர் பெருந்துறை பேரூராட்சியில், தினசரி கூலி அடிப்படையில், தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு அகல்யா (24) என்கிற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சிவக்குமாருக்கும், அகல்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகல்யா, தனது 2 குழந்தைகளோடு ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சாவு

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் சிவகுமார் மிகவும் வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தூய்மை பணிக்கும் சரிவர செல்லாமல் இருந்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் சிவகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்