கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி

விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி நடந்தது.

Update: 2022-10-14 18:45 GMT

மன்னார்குடி:

வைணவ கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ர உற்சவம் நடைபெறும். இத்தினங்களில் வருடம் முழுவதும் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் செய்யப்படும். யாகசாலையில் ஹோம பூஜைகளும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் உள்ளிட்ட வேதங்களும் இடம்பெறும். விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் நடந்த பவித்ர உற்சவத்தைெயாட்டி நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக முள்ளியாறு கரையில் ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது தீர்த்த பேரர் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்டவைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்