சோழவந்தான் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்-அம்ரித் பாரத் திட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை

சோழவந்தான் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அம்ரித் பாரத் திட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2023-06-17 21:12 GMT

 சோழவந்தான்,


சோழவந்தான் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அம்ரித் பாரத் திட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்

சோழவந்தான் ெரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ெரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டி சோழவந்தானை சுற்றியுள்ள கிராம மக்களிடமும், ெரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் சோழவந்தானில் நடைபெற்றது. சேர்மன் ஜெயராமன், முதன்மை திட்ட மேலாளர் (காதிஅம் சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா, முன்னாள் சேர்மன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ெரயில்வே பி.ஆர்.ஓ. கோபிநாத் வரவேற்றார். முன்னதாக சோழவந்தான் ெரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். இதில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

கோரிக்கை

இக்கூட்டத்தில் ெரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அதன்படி சோழவந்தான் ெரயில் நிலையம் அபிவிருத்திக்கான கருத்துக்களை தெரிவித்தனர். இதில் குடிநீர், மின்விளக்கு வசதி, மின்விசிறி வசதி, ெரயில் கோச் தெரிவிக்கும் அடையாளம், கழிப்பறை, ஓட்டல், சுரங்கப்பாதை, வெயிட்டிங் ரூம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதில் கலந்துகொண்ட ெரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து ஓராண்டுக்குள் முடித்து தர ஏற்பாடு செய்யப்படும எனவும், இந்த கோரிக்கைகளை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்