அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
அந்தணப்பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜிடம், நாகை அருகே அந்தணப்பேட்டை வெட்டுக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அந்தணப்பேட்டையில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கூட எங்கள் பகுதிக்கு வர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்தணப்பேட்டையில் அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.