குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும்

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2022-11-05 18:45 GMT

பொள்ளாச்சி, 

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குரங்கு நீர்வீழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் நீர்வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன்பிறகு பருவமழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். இதற்கிடையில் தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நிரந்தர தீர்வு

குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் நீர்வீழ்ச்சிக்கு வருகின்றனர். தென்மேற்கு பருவமழையின் போது தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. ஆனால், அதன்பிறகு தொடர் மழையின் காரணமாக தடுப்பு கம்பிகளை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் தடுப்பு கம்பிகள் ஒவ்வொரு முறை சேதமடையும் போதும் மீண்டும் சீரமைக்கப்படுகிறது. ஆனால், மழை வெள்ளத்தால் தொடர்ந்து தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்