திருத்தணியில் சாலை விபத்துகளை தடுக்க 5 இடங்களில் தடுப்புகள் - போலீசார் நடவடிக்கை

திருத்தணியில் சாலை விபத்துகளை தடுக்க 5 இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2023-06-01 09:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதனையடுத்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் போலீசார் திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கூட்டுச்சாலை, பழைய ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பு சாலை, தரணிவராகபுரம், முருகம்பட்டு மற்றும் பொன்பாடி சோதனைச்சாவடி என 5 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளை அதிக அளவில் தடுக்கமுடியும் என்றும், வாகனங்கள் வேகமாக செல்வது பெருமளவில் குறையும் எனவும் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்