பரங்கி, பூசணிக்காய்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்

பரங்கி, பூசணிக்காய்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகிறது. எனவே பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-09-27 19:01 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம், பொய்யாதநல்லூர், சென்னிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பரங்கிக்காய் மற்றும் பூசணிக்காய் செடிகளை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ளனர். சாகுபடி செய்த 45-வது நாள் பிஞ்சு விடும். இந்தநிலையில், இப்பகுதியில் உள்ள மயில், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பறங்கி, பூசணிக்காய்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மயில் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்