அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வங்கி அதிகாரிகள் வருகை..!

பணப் பரிவர்த்தனை குறித்து வங்கி அதிகாரிகளை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update: 2023-07-17 10:05 GMT

சென்னை,

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரமாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில், இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். வங்கியில் மேற்கொண்டுள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்