மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம்
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.;
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ ஆகிய துறைகள் வாயிலாக வருகிற 22-ந் தேதி(புதன்கிழமை)காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கிக்கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். அப்போது அவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான சமீபத்திய புகைப்படம் 1 ஆகியவற்றுடன் வர வேண்டும். மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். நாகை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.nagapattinam.nic.in என்ற இணையதள முகவரியிலும், 04365 253041 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.