உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி: ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை அனுப்பிய வங்கி ஊழியர் - அதிர்ச்சி அடைந்த கணவர்
கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் வங்கி ஊழியருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் திருமணமான 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண்ணை சிவா வழக்கம்போல உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். கள்ளக்காதலன் அழைப்பை ஏற்க அந்தப்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவா ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்களில் ஒருவர் இந்த வீடியோவை சென்னையில் உள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி விட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி ஊழியர் சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.