வங்கி ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு

பரமத்திவேலூர் அருகே நீச்சல் பழக சென்றபோது வங்கி ஊழியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2022-09-18 19:13 GMT

பரமத்திவேலூர்

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (வயது 22) இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோகுல பிரகாஷ் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக கோகுல பிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலகவுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். நீண்ட நேரத்திற்கு பிறகு கோகுலபிரகாஷின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்