கமுதி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் தங்கப்பாண்டி (வயது 23). இவர் கமுதியில் உள்ள தனியார் வங்கியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.இந்த நிலையில் தங்கப்பாண்டி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதுதொடர்பாக தனது தாயாரிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அனைவரையும் பார்க்க ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து தாயார் முருகேஸ்வரி, தனது இளையமகன் முத்துபாண்டியுடன கமுதியில் உள்ள அவர் தங்கிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அந்த வீட்டில் தங்கப்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.