தேன்கனிக்கோட்டை அருகே 256 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
தேன்கனிக்கோட்டை அருகே 256 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்.;
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டையில் 256 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். இருதுகோட்டை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், அனுமந்தபுரம் யசோதாமணி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு, சத்து மாத்திரைகள் மற்றும் பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக் கல்வி கையேடு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் சங்கீதா, கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன், அசோக், சந்தோஷ், நவீன் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.