வாழை மரங்கள் முறிந்து விழுந்தன
வத்தலக்குண்டு அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.;
வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டி, ரெட்டியபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அந்த பகுதியில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் ரெட்டியபட்டி பகுதியில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான 1,000-க்கும் மேற்பட்ட வாைழ மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி மரியலூயிஸ் கூறுகையில், ஏக்கர் கணக்கில் வாைழ சாகுபடி செய்து இருந்தோம். நேற்று முன்தினம் காற்றுடன் பெய்த மழையால் சில வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாைழ மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.