வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.;
நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.