சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி
கூடலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.;
கூடலூர் பகுதியில் ஒட்டுரக திசு வாழை பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாழைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, சொட்டுநீர் பாசனம் மூலம் வாழைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கிறது. மேலும் வேலை ஆட்கள் அதிக அளவு தேவைப்படுவது இல்லை. இவையில்லாமல் வாழையில் ஊடுபயிராக வெங்காயம், மல்லி, தக்காளி போன்றவற்றை பயிரிட்டு வருகிறோம். தற்போது பச்சை, பூவன், செவ்வாழை ஒட்டு ரக வாழைகளை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பாசனத்தின் மூலம் குறைந்த செலவு ஏற்படுகிறது என்றனர்.