இருசக்கர வாகன பேரணிக்கு தடை போலீசாருடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம்

இருசக்கர வாகன பேரணிக்கு தடை போலீசாருடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-08-14 19:38 GMT

புதுக்கடை:

இருசக்கர வாகன பேரணிக்கு தடை

போலீசாருடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு தேசியக்கொடி ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடத்த பா.ஜ.க.வினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று பேரணியாக செல்ல பா.ஜனதாவினர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 50 பேர் மட்டுமே பேரணியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். ஆனால், ஏராளமானோர் குவிந்திருந்ததால் போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமையில் போலீசார் சாலையின் இரு பக்கமும் தடுப்பு வேலிகள் அமைத்து பா.ஜ.க.வினரை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இருசக்கர வாகன பேரணியை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேங்காப்பட்டணம்-மார்த்தாண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்