கேன்,பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை- போலீஸ் அதிரடி
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது
திண்டுக்கல்,
தமிழ்நாட்டில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில்
இந்த நிலையில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். அதன்படி கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு கேன்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.