நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'கனெக்ட்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

Update: 2022-12-23 11:55 GMT

சென்னை,

நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படம், வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 99 நிமிடங்கள் ஓடும் இப்படத்துக்கு இடைவெளி இல்லை என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். தற்போது நேற்று வெளியான இப்படம் திரையரங்கில் சக்கப் போடு போட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2634 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க, 29 இணையதள் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

2634 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கும்படி, 29 இணைய தள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்