சக்திவேல் முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம்
திருக்கோவிலூர் அருகே சக்திவேல் முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் சக்திவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பங்குனி உத்தரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.