குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.

Update: 2022-09-30 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 4-ம் நாள் விழாவை முன்னிட்டு அம்மன் பாலசுப்பிரமணியர் கோலத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நன்மக்கட் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்