படையாத்தம்மன் கோவிலில் பாலாலயம்
மருதாடு கிராமத்தில் படையாத்தம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.;
வந்தவாசி
வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள படையாத்தம்மன் கோவிலில் பாலாலயம் மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி படையாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது.
பின்னர் கோவில் வளாகத்தில் பாலாலயம் மற்றும் பூமி பூஜை முன்னாள் எம்.பி. மு.துரை முன்னிலையில் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் இயக்க தொண்டு நிறுவனர் கோ.ப.அன்பழகன் மற்றும் மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் லட்சுமணன் சுவாமிகள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கோவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.