விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை

ஆண்டிப்பட்டியில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.

Update: 2023-07-09 19:45 GMT

ஆண்டிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே பாலவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த நிர்வாகத்தினரும், பொதுமக்களும் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று கோவில் வளாகத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது.

இதில் யாகசாலை பீடத்தில் தீர்த்த குடங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் பலகைகளில் மூலவர் பாலவிநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரப் படங்கள் வரையப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. பாலவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மகாராஜன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்