பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..!
பக்ரீத் பண்டிகையையொட்டி, அதிகாலையில் இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.;
சென்னை,
உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக இது உள்ளது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக இறைவன் ஒரு ஆட்டை பலியிட கொடுத்ததையும் நினைவு கூர்ந்து தொழுகை நிறைவேற்றுகிறார்கள்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்!
நாகூர் தர்காவிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.