சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம்

நாகை மலையீஸ்வரன்கோவில் தென்சந்தில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-15 18:45 GMT

நாகை மலையீஸ்வரன்கோவில் தென்சந்தில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடை கழிவுநீர்

நாகை - நாகூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் அவ்வப்போது ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது.

இந்த நிலையில் நாகையின் முக்கிய பகுதியான வணிக வளாகங்கள் நிறைந்த பெரிய கடை தெரு அருகில், மலையீஸ்வரன் கோவில் தென் சந்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் வாசல் வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.

துர்நாற்றம்

அந்தப் பகுதியில் இருந்த பழைய சாக்கடையையும் ஆக்கிரமித்து மூடிவிட்டனர்.

சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கைபிடித்தபடி செல்கின்றனர்.

இந்த கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிபட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடை நீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பொதுமக்களும், வணிகர்களும் எதிர்பார்க்கின்ற

Tags:    

மேலும் செய்திகள்