பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு
வேலூரில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் கே.காஜா முகைதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்க மேலாண்மை இயக்குனர் கோமதி, பொருளாதார மேம்பாட்டு கழக பொது மேலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடன் திட்டங்கள் குறித்தும், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து காஜா முகைதீன் கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கடன் உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.