மஞ்சள்மாதா மீனாட்சிக்கு வளைகாப்பு உற்சவம்

ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மஞ்சள்மாதா மீனாட்சிக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது.;

Update: 2023-08-12 18:45 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் அருகில் உள்ள ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மஞ்சள் மாதா மீனாட்சிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்துகொண்டு மஞ்சள் மாதாவிற்கு வளைகாப்பு விழா நடத்தினர். இதில் 7 வகையான கலவை சாதகங்கள் படைக்கப்பட்டு அனைவருக்கும் சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டன. சிறப்பு வழிபாட்டில் கோவிலின் தலைமை குரு சுவாமி மோகன் சுவாமி கலந்து கொண்டார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்